போதை ஏற்றி! காரில் வைத்து! சீரழித்தார்! வீடியோ எடுத்தார்! 50 வயது நடிகர் மீது இளம் நடிகை பகீர் புகார்!

பிரபல பாலிவுட் நடிகரொருவர் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் நடிகர்களுள் ஆதித்யா பன்சோலி மூத்த நடிகராவார். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இந்நிலையில் இவர் மீது முன்னாள் பாலிவுட் நடிகைகளுள் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் மும்பை மாநகரில் உள்ள வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரில் அவர் கூறியது: 2004-ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகையாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் மும்பைக்கு வந்தேன்.  அப்போது எனக்கு 16 வயது. அதே வருடத்தில் அப்போதைய மூத்த பாலிவுட் நடிகரான ஆதித்யா பன்சோலியை சந்தித்தேன். அவருடைய மகன் வைத்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டேன்.

அப்போது குளிர்பானம் குடித்தேன். குடித்த பின்னர் மயக்கமடைவதாக எண்ணினேன். ஆதித்யா தன் காரில் என்னை விடுதியில் விடுவதாக கூறினார். ஆனால் காரை நடுவழியில் நிறுத்தி என்னிடம் பாலியல் சீண்டல்களை செய்துள்ளார். மேலும் அந்தரங்க புகைப்படங்களையும் எடுத்துள்ளார். 
சில தினங்கள் கழித்து என்னை சந்தித்த போது அவர், "இருவரும் உல்லாசமாக இருப்போம்" என்று கூறினார். நான் அதற்கு மறுத்த போது, என் அந்தரங்க புகைப்படங்களை காட்டி என்னை மிரட்டினார். மேலும் பல முறை என்னை அடித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். 

2007-ஆம் ஆண்டில் என் சகோதரியுடன், வசித்து வந்தேன். அப்போது மது போதையில் இருவரையும் தாக்கி என்னுடன் உறவு கொண்டார். நான் புகழ் அடைந்த பிறகு, முன்னர் எடுத்த புகைப்படங்களை காட்டி என் சினிமா வாழ்க்கையை அழித்து விடுவேன் என்று மிரட்டினார்.
நான் அவருக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். அவர் என்னை மிரட்டி அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன" என்று மனுவில் கூறியுள்ளார்.  வெர்சோவா காவல்துறையினர் ஆதித்யா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகர் ஆதித்யா 19-ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்த குற்றச்சாட்டானது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.