அடித்து உதைத்து ரத்தம் வர வைத்தான்! காதலன் மீது சிலம்பாட்டம் நடிகை பரபர புகார்..!

நடிகர் சிம்புவின் ஜோடியாக நடித்த நடிகை தன்னுடைய காதலன் தன்னை கொடுமைப்படுத்தியதை சமூக வலைத்தளங்களில் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.


திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சனாகான். இவர் சிலம்பாட்டம் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த சில வருடங்களாக மெல்வின் லூயிஸ் என்ற வெளிநாட்டவரை காதலித்து வந்தார். இருவரும் இணைந்து பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். பல புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். இது சமூக வலைத்தளங்களில் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அதன் பின்னர் நிகழ்ந்தவற்றை சமூக வலைத்தள வாசிகளால் புரிந்து கொள்ள இயலவில்லை. நடிகை சனாகான் தன் முன்னாள் காதலர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார்.

அவர் பதிவு செய்ததாவது, "ஒரு பெண் திடீரென்று எனக்கு கால் செய்தார். அவரிடம் கேட்டபோது, என்னுடைய முன்னாள் காதலனான மெல்வின் லூயிஸ், 17 வயதான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறினார். அதற்கான ஆதாரங்களையும் என்னிடம் கொடுத்தார். மற்றொரு பெண் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தி கொள்ள விருப்பமில்லாமல், மெல்வின் லூயிஸ் அவரை கற்பழித்ததை கதறி அழுது கூறினார்.

அதோடு நில்லாமல் 13 வயது இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து அவரை கற்பழித்ததும் எனக்கு தெரிய வந்துள்ளது. இவ்வளவு கேடுகெட்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, எனக்கு அவர் வாழ்க்கையை வாழும் முறை குறித்து கற்றுக்கொடுத்தார். இதற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மெல்வின் லூயிஸ் "சனா கான் என்னிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக பிளாக் மெயில் செய்கிறார். அவர் கூறியவற்றில் துளி கூட உண்மையில்லை" என்று பதிலளித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனாகான் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதாவது, "காதலை முறித்து கொண்டபோது மெல்வின் முன் தைரியமாக நின்றேன். அப்போது என்னை மன மாற்றம் செய்ய அவர் முயற்சி செய்தார். ஆனால் நான் அதற்கு இடம் கொடுக்காததால், அவர் என்னை பலமாக தாக்கினார்.

இதனால் என்னுடைய தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. மேலும் முகத்திலும் பல்வேறு காயங்கள் ஏற்பட்டன. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இவற்றை நான் மெல்வினிடம் கூறியதாக அவர் நான் பிளாக்மெயில் செய்வதாக கூறுகிறார்" என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.