திருமணமான ஹீரோவிடம் சரண் அடைந்த நடுத்தர வயது நடிகை! கோடம்பாக்கம் கிசுகிசு!

பிரபல திரைப்பட கதாநாயகர் 2-வதாக கோலிவுட் நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் "கழுகு" என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் கிருஷ்ணா என்ற புதுமுக நடிகர் கதாநாயகனாக நடித்தார். இவர் 2014-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த "வன்மம்" என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது அதே திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சுனைனாவுடன் கிருஷ்ணாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த காலத்தில்தான் கிருஷ்ணா ஹேமலதா என்ற பெண்ணை 2014-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில காலத்திலிருந்து இருவருக்கும் கடுமையான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன.

இதனால் 2016-ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இத்தகைய தகராறுகளினால் கிருஷ்ணா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் பின்னர் சுனைனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காதலானது. தற்போது மன உளைச்சலில் இருந்து மீண்டு வந்துள்ள கிருஷ்ணா படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் சுனைனாவுடன் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வதந்தியானது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.