பெண்ணின் லெக்கின்ஸ்க்குள் கட்டி கட்டியாக தங்கம்! கண்டுபிடித்த அதிகாரிகள்! ஏர்போர்ட் பரபரப்பு!

பெண் ஒருவர் தன் லெக்கின்ஸ் உடை மற்றும் கால் சாக்ஸில் 11 கிலோ தங்கத்தை பதுக்கி வந்த போது ஹைதராபாத் விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெளிநாட்டு பெண் ஒருவர் தன் உடையில் மறைத்தவாறு கொண்டு வந்த 11.1 கிலோ தங்கத்தை ரெவன்யூ அமைப்பினர் பறிமுதல் செய்தனர். இந்த பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததாகவும் மேலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அளித்த கூறுகளின் அடிப்படையில் இவரை கண்காணித்து வந்ததாக கூறினர். 

இந்த பெண்ணிடமிருந்து 3,63,52,50 0 மதிப்புமிக்க தங்கத்தினை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்ததாகவும் ஷம்ஸபாத் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்துள்ளார்.

பின்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சோதனை செய்த போது அங்கு 1.5 கோடி மதிப்புள்ள அந்நிய செலாவணி பறிமுதல் செய்துள்ளனர். அங்கு விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை விற்று அதன் மூலம் பணத்தை ஈட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பணத்தை அந்நிய செலாவணியில் மாற்றி நாட்டிற்கு வெளியே எடுத்து சென்று பிற இடங்களில் வியாபாரம் செய்து வந்துள்ளார். போலீசார் இவரிடம் மற்றும் இவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை  பறிமுதல் செய்து 1962-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கஸ்டம்ஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவருக்கு பின் யாரேனும் இருந்து இவரை இயக்குகிறார்களாக என்பதை விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று கடந்த மாதம் வெளிநாட்டு பயணி ஒருவர் தங்க கட்டிகளை மறைத்து வந்த போது ஹைதராபாத் விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் 33 தங்ககட்டிகளை மறைத்து வந்த போது அவர் நடையில் ஏற்பட்ட சந்தேதத்தினால் இவரை சோதனையிட்டனர். பின்னர் தங்கத்தை பறிமுதல் செய்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.