கொரோனாவால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக கருதப்பட்டு வந்த நிலையில் மகனை தானே கொலை செய்ததாக பிரபல கால்பந்து வீரர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் மகனுக்கு கொரோனா இல்லை..! ஆனால் அவன் மூச்சை நிறுத்தி கொன்றது நான் தான்..! புகைப்படத்தை வெளியிட்டு தந்தை சொன்ன பகீர் காரணம்!
துருக்கி நாட்டின் பிரபல கால்பந்து வீரர்களில் ஒருவர் செவ்ஹெர் டோக்டாஸ். இவருடைய வயது 32. இவருக்கு 5 வயதில் காசிம் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் சென்ற மாதம் செவ்ஹெருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே மருத்துவமனையில் காசிம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அப்போது காசிமுக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்து வந்ததால் மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தினர். அன்று மாலையே மூச்சுத் திணறல் அதிகமானதால் தன்னுடைய மகன் துடித்து கொண்டிருப்பதாக செவ்ஹெர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து காசிமுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் 2 மணி நேரத்திற்கு பிறகு எந்தவித சிகிச்சை பலனுமின்றி காசிம் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா நோய் அறிகுறிகள் காசிமிடம் தென்பட்டதால் உடனடியாக அந்த முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டு சில நாட்களில் செவ்ஹெர் என் மகனின் கல்லறை புகைப்படத்தை வெளியிட்டு "இந்த உலகத்தை நம்பி வாழாதே" என்று பதிவிட்டிருந்தார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய மகனை தானே கொலை செய்ததாக செவ்ஹெர் பரபரப்பான வாக்குமூலத்தில் அளித்துள்ளார்.
அதாவது அவனை நேசித்து இயலாத காரணத்தினால் வெறுப்புற்று மூச்சுத் திணறடித்து கொலை செய்ததாக செவ்ஹெர் காவல்நிலையத்தில் கூறியுள்ளார். மேலும் தனக்கு உளவியல் ரீதியாக எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சம்பவமானது துருக்கி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.