அவள் நடத்தை சரியில்லை! நம்பர் நடிகையின் காதலன் போதையில் உலறல்! நடிகரின் செல்போனில் பதிவான ஆடியோ! கோடம்பாக்கம் கிசுகிசு!

முன்னணி நடிகையை காதலித்து வரும் இயக்குனர் தன் காதலியை போதையில் கன்னாபின்னா என்று உளறிக் கொட்டிய ஆடியோ பதிவு வெளியாகி விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக கோடம்பாக்கம் ஏரியாவில் பேசப்படுகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையை முன்னணி இயக்குனர் ஒருவர் காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அவர்களது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் அவர்களோ திருமணத்தைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் வெளியே கூறாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை தங்களது வழக்கமாக கொண்டுள்ளனர். 

மேலும் வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும்போது அங்கு எடுக்கப்படும் நெருக்கமான புகைப்படங்களையும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மூலம் வெளியிட்டு ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்வது இந்த ஜோடியின் வழக்கமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றவாறு அந்த பிரபல நடிகை நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளாராம் . ஆகையால் அடுத்த ஆண்டு கூட இவர்கள் திருமணம் செய்துகொள்வது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.

இதே சமயம் இயக்குனர் மற்றும் நடிகையின் காதலர் , குடிபோதையில் காதலியை பற்றி மிகவும் தவறாக நண்பர் ஒருவரிடம் உளறி இருக்கிறாராம். நடிகையின் கேரக்டர் குறித்து அந்த இயக்குனர் அடித்த கமெண்டை இளம் நடிகர் ஒருவர் ஆடியோவாக பதிவு செய்துள்ளாராம்.

இந்த ஆடியோ பதிவு ஒருவேளை அந்த இயக்குனரின் காதலி கேட்டுவிட்டால் இவர்களது காதலுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளியாக அமைந்துவிடும் என்று இயக்குனர் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வி அடைந்த நடிகை தற்போது மூன்றாவது முறையும் காதல் தோல்வியை சந்தித்து விடுவாரோ என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.