எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!

பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா வின் மனைவி குஜராத்தின் ஜாம் நகரில் மக்களவை தேர்தலில் பிஜேபியின் சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாக பிஜேபியில் இணைந்தார். முன்னதாக ரிவாபா ஜடேஜா கார்னி சேனா என்ற பெண்களின் அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக ரிவாபா ஜடேஜா தனது முழு விருப்பத்துடன் பிஜேபி யில் இணைந்தார். இந்நிலையில் அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸுக்கு எதிராக போட்டியிடவேண்டும் என்று முடிவு செய்து பிஜேபி தலைமைக்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் காங்கிரஸின் சார்பாக ஹர்டிக் படேல் நிற்க வாய்ப்பு அதிகமா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் குஜராத் மாநிலம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி குஜராத்தில் உள்ள அணைத்து தொகுதிகளையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரிபாவா ஜடேஜா ஜாம் நகரில் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் யாரை ஜாம் நகரில் பிஜேபி நிறுத்த போகிறது என்று.