காதல் திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் தற்போது மனநிலை சரியில்லாமல் பிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனப் பிறழ்ச்சி! குடிக்கு அடிமை! சாலையோரம் பிச்சை எடுக்கும் விருச்சிககாந்த்..! காதல் காமெடி நடிகரின் பரிதாப நிலை!
நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இது திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் விருச்சிககாந்த் வேடத்தில் நடிகர் பல்லு பாலா நடித்திருப்பார். அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அவர் நடித்திருந்தாலும் கூட இன்றளவும் அவரை யாராலும் மறக்க முடியாது.
சில மாதங்களுக்கு முன்பு மிகவும் வறுமையில் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்த பல்லு பாலாவை , நடிகர் சாய் தீனா என்பவர் மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருந்தார். சில காலங்கள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த பல்லு பாலா , மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அங்கிருந்து தப்பியோடி சென்னை வடபழனி அருகே உள்ள சாலையோரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதாகவும் , அவரின் மனநிலை மீண்டும் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது .
நடிகர் பல்லு பாலா குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரின் மனநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .