பிரபல நடிகர் சார்லி மகனுக்கு கல்யாணம்! பொன்னு யார் தெரியுமா?

பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி மகனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.


தமிழ் துறையின் பல்வேறு முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்,அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நிறைய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் சார்லி. இவர் ஏறக்குறைய 800 தமிழ் சினிமாக்களில் நடித்துள்ளார். இயக்குனர் கே. பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான "பொய்க்கால் குதிரை" எனும் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்திருந்தார். 

சமீப காலங்களில் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் ஆதித்யா. ஆதித்யாவுக்கும், சென்னையை சேர்ந்த அமிர்தா என்ற பெண்ணுக்கும் கோலாகலமான முறையில் திருமணம் நடைபெற்றது.

திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர். ராதாரவி, செந்தில், பொன்வண்ணன் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சார்லியின் ரசிகர்கள் அவரின் மகனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்து வருகின்றனர். 

மணமக்கள் நன்றாக வாழ அனைவரது வாழ்த்துக்கள்.