பிரபல நகைச்சுவை நடிகர் விபத்தில் பலியான சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பைக்கில் சென்ற போது விபரீதம்! சம்பவ இடத்திலேயே பிரபல நடிகர் மரணம்! மனைவி உயிருக்கு போராடும் அவலம்! சென்னை அதிர்ச்சி!

தமிழ் மொழியின் முண்ணனி மிமிக்ரி நடிகர்களுள், நடிகர் மனோவும் ஒருவர். இவர் பல மேடைகளில் மிமிக்ரி செய்து மக்களை மகிழ்விப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற கோலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
இவர் தன்னுடைய மனைவியுடன் சென்னை ஆவடியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கினர்.
துரதிருஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே நடிகர் மனோ இறந்து போனார். அவருடைய மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மனோவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அவருடைய மனைவியை போரூரில் இயங்கி வரும் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
பிரபல நகைச்சுவை கலைஞரும், முண்ணனி இயக்குநருமான மனோபாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மனோவின் புகைப்படத்தின் மேல் "மேலும் ஒரு இழப்பு" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த செய்தியானது கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.