பிரபல நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம் !!

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி


திருவனந்தபுரம்: மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இயக்குனராக சினிமாவில் அறிமுகம் ஆன ஸ்ரீனிவாசன், தனித்துவமான கதையம்ச படங்களை இயக்கியது மட்டுமின்றி, குணச்சித்திர நடிகராகவும் மாறினார். பல்வேறு படங்களை இயக்கியதோடு, நடிகராகவும் மாறி, மலையாள சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை பெற்றுள்ளார். 

இந்நிலையில், ஸ்ரீனிவாசன், காக்கநாடு பகுதியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், படத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவதாகக் கூறிய அவர், மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த படக்குழுவினர் அவரை மீட்டு, பலரிவட்டம் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

மருத்துவமனை சென்றபிறகும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற விவரங்களை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. 

இந்த செய்தி மலையாள சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.