பிரபல திரைப்பட நடிகை சித்தாரா தான் திருமணம் செய்து கொள்ளாதற்கு என்ன காரணம் என்று மனம் திறந்துள்ளார்.
47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வசித்து வரும் சீனியர் நடிகை..! காரணம் அந்த நபராம்..!
இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சித்தாரா. தன்னுடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் அதன்பிறகு பல்வேறு பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அந்த வகையில் இவர் நடித்த புது வசந்தம், புரியாத புதிர், புது புது ராகங்கள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி ஆனார். அதன் பிறகு நட்புக்காக ,படையப்பா, முகவரி போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகை சித்தாரா சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை சித்தாரா 47 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நான் தான் முடிவு எடுத்தேன் அதற்கு காரணம் ஒரு முக்கிய நபர். என் வாழ்வில் அந்த முக்கிய நபரை நான் இழந்துவிட்டேன். என் தந்தைதான் அந்த முக்கிய நபர் அவர் இறந்த பிறகு எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.
இனிமேல் சரியான வாய்ப்பு வந்தால் திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை சித்தாரா அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.