தெலுங்கு குழந்தை நடிகரான கோகுல் சாய் கிருஷ்ணா உயிரிழந்த செய்தியானது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மயக்கம்! ஹாஸ்பிடலில் அவசர அட்மிட்! ஆனாலும் மரணித்த குழந்தை நட்சத்திரம்! அதிர்ச்சி காரணம்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் பாலகிருஷ்ணாவும் ஒருவர். ஆந்திரா மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு கோகுல் சாய் கிருஷ்ணா என்ற குழந்தை நட்சத்திரம் வசித்து வந்துள்ளார்.
இவர் பாலகிருஷ்ணாவை போன்று மிமிக்ரி செய்வதில் வல்லவராக திகழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக டெங்கு நோய்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் சரியாகாத காரணத்தினால், பெங்களூருவில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு செல்வதற்காக அவருடைய பெற்றோர் முடிவெடுத்தனர்.
ஆனால் பெங்களூருவுக்கு செல்வதற்கு முன்னரே கோகுல சாய் கிருஷ்ணா இறந்துவிட்டார். இந்த செய்தியானது தெலுங்கு திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகுல சாய் கிருஷ்ணாவின் திடீர் மறைவுக்கு நந்தமுரி பாலகிருஷ்ணா தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "எனக்கு என்னுடைய ரசிகர்களை காட்டிலும் வேறு யாரும் முக்கியமில்லை. கோகுல சாய் கிருஷ்ணாவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய நாள் வசனங்களை என்னை விட மிகவும் அழகாக உச்சரித்து என்னை கவர்ந்தவர்" என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தெலுங்கு நடிகையான அனுஷ்யா பரத்வாஜ், "உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். உன்னுடைய இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை இறைவன் உன்னுடைய பெற்றோருக்கு அளிக்க வேண்டிக்கொள்கிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கோகுல சாய் கிருஷ்ணா "ட்ராமா ஜூனியர்ஸ்" என்ற குழுவில் இணைந்து பாலமுரளிகிருஷ்ணாவை போன்று வசனங்களை பேசி நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.