தற்கொலை செய்தவருக்கு உடம்பில் அந்த இடத்தில் காயம் எப்படி? தொழில் அதிபர் ரீட்டா மரணத்தில் எழும் சந்தேகங்கள்!

கார் விற்பனை நிறுவனத்தின் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லான்சன் டொயோட்டா கார் நிறுவனத்தின் இணை சேர்மனாக ரீட்டா லங்கா பணியாற்றி வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சடலமாக இருந்ததை அவருடைய சூப்பர்வைசரான இயேசுபாதம் என்பவர் பார்த்து அதிர்ந்துள்ளார்.

உடனடியாக அவர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ரீட்டா தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது ஆனால் சடலமாக இருந்த நிலையில் அவருடைய முகத்தில் ரத்த காயங்கள் இருந்துள்ளன.

மேலும் அவர திரைச்சீலையில் தொங்கவிடப்பட்டிருந்தது. அவர் இருந்த அறை  உள்தாழிடப்பட்டிருந்தது. ஆனால் ஆள் உயரளவில் இருந்த பிரெஞ்சு டோர் சாத்தபடாமல் இருந்தது காவல்துறையினருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரீட்டா முகத்தில் காயம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரைச் சீலையை ரீட்டா தூக்கு கயிறாக பயன்படுத்தியதும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

ரீட்டா தற்கொலை செய்து கொண்டதற்கு ஆட்டோ மொபைல் சந்தை மந்தமாக செல்வதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர். பிரேத பரிசோதனையின் முடிவு வந்தவுடன் விசாரணையை தொடர முடிவெடுத்துள்ளனர். 

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.