புத்தாண்டு கொண்டாட லிஃப்ட்டில் ஏறிய தொழில் அதிபர் குடும்பம்..! ஒரே நொடியில் 6 பேரும் சடலமான பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

70 அடி உயரத்திலிருந்து லிஃப்ட் கீழே விழுந்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவமானது மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவர் புனீத் அகர்வால். இவர் இந்தூரிலுள்ள படல்பானி எனும் பகுதியில் சொந்தமாக பண்ணை வீடு வைத்திருந்தார். 

புத்தாண்டை கொண்டாடுவதற்காக புனீத் தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அந்த பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். கொண்டாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், வீட்டின் கோபுரத்திற்கு சென்று வெளி அழகை காண்பதற்கு அனைவரும் லிஃப்டில் சென்றுள்ளனர். 

கோபுரத்தில் நின்று அழகை ரசித்த பின்னர், அவர்கள் லிஃப்டின் மூலம் கீழே வர முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக 70 அடி உயரத்திலிருந்து லிஃப்ட் வேகமாக கீழே விழுந்துள்ளது.

இந்த கொடூர விபத்தில் புனீத் அகர்வால், மகள் பாலக் அகர்வால் மருமகன் பால்கேஷ் அகர்வால், பேரன் நாவ் மற்றும்  உறவினர்களான கௌரவ், ஆரவ்யீர் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.

புனீத்தின் மனைவியான நிதி அகர்வால் படுகாயமடைந்து இருந்ததால், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மகனான நிபுன் கோபுரத்திலேயே தங்கி விட்டதால் இந்த விபத்திலிருந்து தப்பித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.