துணி அடுக்கும் அலமாரியில் கட்டு கட்டாக ரூ.32 கோடி பணம்! அதிகாரிகளை அலற வைத்த கரூர் தொழில் அதிபர் வீடு!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டத்தில் ஷோபிகா இன்பெக்ஸ் கொசு வலை தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையின் அதிபரின் பெயர் சிவகாமி. சிவகாமி வரிஏய்ப்பு முதலிய பொருளாதார குற்றங்களை செய்துவருவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது‌.

தகவலின் அடிப்படையில் தொழிலதிபர் சிவகாமிக்கு சொந்தமான ஆலைகள், வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையின்போது வீட்டில் துணி அடுக்கி வைக்கப்படும் அலமாரியில் 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 32 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

சிவகாமிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.