சென்னையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள்! மெட்ராஸ் டே ஸ்பெஷல்!

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


சென்னை என்று சொன்னாலே மக்கள் மனதில் சில வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் நினைவிற்கு வரும் அவற்றைப்பற்றி நாம் இனி காண்போம்.

தமிழ் சினிமாக்களில் சென்னை என்று சொன்னாலே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிகப்பு நிற கட்டிடமும் , சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடமும் சென்னையின் அடையாளமாக காண்பிக்கப்பட்டு வருகிறது .

நடுத்தர கால தமிழ் சினிமாக்களில் படத்தின் கதாநாயகன் கிராமங்களிலிருந்து சென்னைக்கு வருவது போல காட்சி ஏதாவது இருந்தால் அந்த காட்சியில் காண்பிக்கப்படும் முதல் கட்டிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிகப்பு நிற கட்டிடம் ஆகும் . வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடத்தை 1873 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஹார்டிங் என்பவர் வடிவமைத்தார் .

சென்னை மாநகரின் அடையாளமாக கருதப்படும் மற்றும் ஒரு கட்டிடம் சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள எல்ஐசி கட்டிடம் ஆகும் . சென்னையில் 1959 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட எல் ஐ சி கட்டிடம் ,இந்தியாவிலேயே உயரமான கட்டிடமாக இருந்து வந்தது .

சென்னை மாநகரின் மற்றொரு அடையாளமாக கருதப்படும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டிடம்.வரலாற்று சிறப்புமிக்க இக்கட்டிடம் 1888ஆம் ஆண்டு J.W.பிராசிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது .