கைது ஆகிறாரா பிரபல பிக்பாஸ் நடிகை..? செம்பரம்பாக்கம் பரபரப்பு

பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருக்கும் மீரா மிதுனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு நாளிலும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். 15 போட்டியாளர்களில் ஒருவராக மாடல் அழகி மிரா மிதுன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவராவார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர் மீது ஜோன் மைக்கல் பிரவீன் என்பவர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதாவது தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் மாடல் அழகி போட்டிகளை நடத்துவதாக மீரா மிதுன் பல்வேறு பெண்களை ஏமாற்றியுள்ளார். இதனால் தன் நிறுவனத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

அவர் மீது அளித்திருந்த புகாரை விசாரிப்பதற்காக காவல்துறையினர் பிக் பாஸ் நிகழ்ச்சி நிகழ்ந்துவரும் பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம்ஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு அரைமணி நேரம் மீரா மிதுனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் காவல் துறையினர் அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவமானது செம்பரம்பாக்கத்தில் சிறிது நேரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.