CAM SCANNER ஆப் உங்கள் போனில் இருக்கிறதா? அப்படி என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இது தான்..!

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மால்வேர் செயலிகள் நீக்கப்பட்டு வருகிறது.


கூகுள் பிளே ஸ்டோரில் ஆபத்தான செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆபத்தான செயலிகளை பிளேஸ்டோரில் இருந்து நீக்குவதாக கூகுள் முடிவு செய்துள்ளது.ஆபத்தான செயலிகள் (Dangerous Apps) என்ற பெயரில் சென்ற மாதம் 40 செயலிகளை கூகுல் நிறுவனம் நீக்கியுள்ளது. 

இவற்றினால் எளிய முறையில் வைரஸ் நம்முடைய மொபைல்களிலும்,கணினிகளிலும் பரவும் அபாயமுள்ளதாக கூகுள் கணித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூகுள் மேலும் ஒரு பிரபலமான செயலியை இந்த குழுவினுள்  சேர்த்துள்ளது.

கேம்ஸ்கேனர் ("CamScanner") என்பது அந்த செயலியின் பெயராகும். இதுவரை உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர். கணினிகளிலும், மொபைல்களிலும் அதிகமான வைரஸ் இந்த செயலியினாலேயே பரவி வருவதாக கூகுள் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்த செயலியை விரைவு நீக்கம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.