வீட்டு வேலைக்கார பெண்! துப்புரவு பணிப் பெண்! அக்குபஞ்சர் டாக்டரின் லீலைகள்! பொறி வைத்து பிடித்த போலீஸ்!

சென்னையில் பிரபல அக்குபஞ்சர் மருத்துவர் தன் வீட்டுப் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் மாநகரில் தேனாம்பேட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வசித்து வருபவர் ஷபீர் அஹ்மத். இவர் தனியார் குடியிருப்பில் அக்குபஞ்சர் கிளினிக் அமைத்து மருத்துவ உதவி செய்து வருகிறார். இவருடன் துப்புரவு பணிப்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று, ஷபீர் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியில் பல்வேறு அத்துமீறல்களை செய்துள்ளார். அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவும் சபீர் முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தினரிடம் தனக்கு நேர்ந்த இன்னல்களை பற்றி கூறியுள்ளார். பெண்ணின் உறவினர்கள் அவருக்கு ஊக்கமளித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க செய்துள்ளனர்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஷபீர் அஹ்மத் தேனாம்பேட்டை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதே குடியிருப்பில் வேலைக்கார பெண்கள் 4 பேர்4  ஷபீர் அஹ்மத் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது சென்னை தேனாம்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.