ஊரடங்கு நாளில் என்னுடைய துணை..! பாஜக தொழில் அதிபருடன் திருமணம் என தகவல் வெளியான நிலையில் வைரலாகும் புகைப்படம்!

கொரோனா வைரஸ் தாக்குதலினால் தனிமையாகயுள்ள புகைப்படத்தை பிரபல நடிகை வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தென்னிந்திய திரையுலகில் திகழ்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்‌. இவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில் "நடிகையர் திலகம்" என்ற  திரைப்படத்தில் சாவித்திரி ஆகவே வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் "பைரவா" என்ற திரைப்படத்தில் இளையதளபதி விஜய்யுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையான "அண்ணாத்த" என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகில் "மிஸ் இந்தியா", பாலிவுட் திரையுலகில் "ரங்க் தே" என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது அவர் ஒரு தொழிலதிபருடன் காதலில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தாகி இருப்பதால் இவர் வீட்டிலேயே வசித்து வருகிறார்.

மேலும் தங்களுடைய செல்லப்பிராணியான நாயுடன் புகைப்படத்தை எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படத்தை பெரிதளவில் ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.