போலீஸில் சிக்கிய பிக்பாஸ் நடிகை மீரா மிதுன்! அதிரவைக்கும் மிரட்டல் புகார்!

பிரபல தொழிலதிபரை மிரட்டியதற்காக பிக்பாஸ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றவர் மீரா மிதுன். இவர் போட்டியாளர்கள் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்தார். குறிப்பாக இயக்குனர் சேரனுடன் ஏற்பட்ட வாக்குவாதங்களை பொதுமக்கள் வன்மையாக கண்டித்தனர். இதனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

2019-ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். இந்நிலையில் 2017-ஆம் ஆண்டில் மாடலிங் துறையை சேர்ந்த தொழிலதிபரான ஜோ மைக்கல் பிரவின் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அறிமுகமானது கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாக மாறியது. பின்னர் இருவரும் நண்பர்களாக பழகினர்.

இதனிடையே இருவருக்குமிடையே பணம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். திடீரென்று மீராமிதுன், மைக்கேல் பிரவீனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மைக்கேல் பிரவீன், காவல்துறை ஆணையரிடம் தன்னையும் தன் குடும்பத்தையும் மீராமிதுன் அச்சுறுத்துவதாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் தற்போது எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசியதற்காகவும், கொலைமிரட்டல் விடுத்தற்காகவும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.