உங்களை என்னமோனு நினைச்சோம்! கஸ்தூரி வெளியிட்ட மதர்ஸ் டே போட்டோ..!

பிரபல நடிகை ஒருவர் அன்னையர் தினத்தன்று வெளியிட்டுள்ள புகைப்படமானது ரசிகர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.


தன்னுடைய எண்ணத்தில் தோன்றும் கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இதனால் இவர் மீது நிறைய ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது இயல்பாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் பலரை கிண்டல் செய்வதும் புரட்சிகரமான கருத்துக்களை எடுத்துரைப்பதும் என்று தன்னுடைய காலத்தை ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3-வது சீசனில் பங்கேற்று வந்தார். சம்பந்தம் இல்லாதவற்றை பேசி வந்ததால் வீட்டிலிருந்து வெளியேறினார். வெளியே வந்தவுடன் சும்மா இருக்காமல் தன்னுடைய சக போட்டியாளர்களுடன் தகராறில் ஈடுபட தொடங்கினார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், பல அரசியல்ரீதியான பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார். சமீப காலத்தில் இவர் நடிகர் அஜித் ரசிகர்களுக்கு வார்த்தை போரில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அன்னையர் தினத்தை முன்னிட்டு இவர் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்று அந்த புகைப்படத்தில் தோன்றி இருந்தார். இந்த புகைப்படமானது இன்று சமூக வலைத்தளங்களில் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. மேலும், ரசிகர்கள் பலர் "உங்களை தவறாக எண்ணியிருந்தோம். ஆனால் இவ்வளவு நல்லுள்ளம் படைத்தவர்கள் என்பது தெரியாமல் போய்விட்டது" என்று பதிவு செய்திருந்தனர்.

இவருடைய புகைப்படமானது இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.