ஒரே நிமிசத்துல பிக்கப் பண்ணிட்டார்! விஜயுடன் நடனம் ஆடிய போது..! 19 வருட ரகசியத்தை உடைத்த நடிகை!

பிரபல நடிகை ரிச்சா பல்லோட் நடிகர் விஜய்யுடன் ஷாஜகான் திரைப்படத்தில் நடித்த நினைவுகள் பற்றி மனம் திறந்துள்ளார்.


தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த ஷாஜகான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லோட். அதன்பிறகு அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன் மற்றும் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் போன்ற சில திரைப் படங்களில் அவர் நடித்து இருந்தார். இவர் கதாநாயகியாக நடித்த ஷாஜகான் திரைப்படத்தில் பாடல்கள் அனைத்துமே மிகப் பெரிய ஹிட் ஆகியது. 

இந்நிலையில் நடிகை ரிச்சா பலோட் சமீபத்தில் இணையதளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் நடித்த ஷாஜகான் பட நினைவுகளை பற்றி பகிர்ந்து கொண்டார். அந்தப் பேட்டியில் அவர் நடிகர் விஜயுடன் பாடல் காட்சியில் நடிப்பது மிகவும் கடினமான விஷயம். அவர் எளிதாக டைமிங் பிக்கப் செய்து விடுவார். அவருடன் டான்ஸ் ஆடுவது மிகவும் ஜாலியாக இருந்தது. ஷாஜகான் திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கும்.

அந்த படம் நடித்து முடித்து இத்தனை வருடங்கள் ஆகியும் கூட ஷாஜகான் திரைப்படத்திற்காக எனக்கு கிடைத்து வரும் அன்பு மிகப் பெரியது. இவ்வாறு அவர் அந்த பேட்டியில் ஷாஜகான் திரைப்படத்தைப் பற்றி கூறியிருந்தார்.