பிரபல நடிகை திடீர் கர்ப்பம்! வெளியானது புகைப்படம்! ஆனால் கல்யாணம் ஆகிவிட்டதா?

பிரபல நடிகையொருவர் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் செயலியில் வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னட திரையுலகில் உள்ள பிரபல நடிகைகளுள் ஸ்ருதி ஹரிஹரனும் ஒருவர். இவர் நடித்துள்ள பல படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரியளவில் ஹிட்டாகியுள்ளன. "நெருங்கி வா முத்தமிடாதே", "சினிமா கம்பெனி","ஹாப்பி நியூ இயர்", "ஹம்புல் பொலிடிசியன்", "நிபுணன்" ஆகிய படங்களில் இவர் நடித்து பிரம்மாண்ட வெற்றியடைந்தன.

இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இருட்டு அறையில் சிறிய வெளிச்சத்தில் நீல கலர் ஆடையில் புகைப்படத்தை எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார். புகைப்படத்தின் கீழே, "என்னுள் இருக்கும் உயிரே. என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல இருக்கும் அதிசயமே. உலகிற்கும் நம் குடும்பத்திற்கும் விரைவில் வருகை தரு என் செல்ல குட்டியே" என்று பதிவு செய்திருந்தார்.

ஸ்ருதிக்கு சமூகவலைத்தளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் ஸ்ருதிக்கு வாழ்த்துச் செய்திகளில் பரிமாறி வருகின்றனர். ஸ்ருதி இறுதியாக நாகசராமி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.  மேலும் 3 திரைப்படங்கள் இவரது கைவசத்தில் இருக்கின்றன.  ஸ்ருதி ஹரிஹரன் கர்ப்பமான செய்தியானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில வருடங்கள் முன்னர் இவருக்கு கன்னட மாநிலத்தில் உள்ள நடனக்கலைஞர் மற்றும் நடிகரான ராம் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  திருமணத்தை ரகசியமாக செய்து கொண்டார் என்று சர்ச்சைகளும் கிளம்பின. ஆனால் ஸ்ருதி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெறப்போகிறார் என்று சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர்.