தயவு செய்து உதவுங்கள்! கை எடுத்து கும்பிட்டு உதவி கேட்ட பிரபல நடிகை! நெட்டிசன்கள் மனம் நெகிழ்ந்த தருணம்!

கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு உதவுமாறு பிரபல நடிகையான அமலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேண்டியுள்ளார்.


கடந்த வாரம் தொடக்கத்திலிருந்தே  கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையும் நிலச்சரிவும் ஏற்பட்டதில் கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். மேலும் 58 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கிட்டத்தட்ட 2.5 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  வரலாறு காணாத மழை பெய்ததில் கிட்டத்தட்ட 14 மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வயநாடு, ஆலிபுழா முதலிய இடங்கள் முற்றிலும் பாழடைந்துள்ளன. மீட்பு பணியினர் தங்களுடைய பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான அமலா தன் ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்று பதிவிட்டுள்ளார். 

அதாவது "உங்கள் பக்கத்து மாநிலத்திலுள்ள நண்பர்கள் வரலாறு காணாத மழையில் சிக்கி தவிக்கின்றனர். தயவு செய்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் கேரளா அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யலாம்" என்று பதிவு செய்திருந்தார். 

மேலும் கைகளை கும்பிடும்படியான எமோஜியை போட்டிருந்தார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.