பிரபல நடிகையின் புகைப்படமானது ஆபாச வலைத்தளங்களில் இடம்பெற்றுள்ள சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏடாகூட இணையதளத்தில் பாகுபலி நடிகையின் அந்த போட்டோ! அதைப் பார்த்து அவர் வெளியிட்ட ஷாக் தகவல்!

சமூக வலைத்தளங்களில் நிறைய பிரபலங்கள் தங்களுடைய புகைப்படங்கள் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் பெருமளவில் இருக்கும் காரணத்தினால் புகைப்படங்கள் நன்றாக சென்றடைகின்றன. ஆனால் தவறான நோக்குடன் சிலர் இவர்களுடைய புகைப்படங்களை பார்த்து வருவது வழக்கமாக உள்ளது.
புகைப்படங்கள் மார்ஃபிங் செய்வது அல்லது ஏதேனும் ஆபாச வலைத்தளங்களில் விளம்பரமாக வரவழைப்பது போன்ற தவறான செயல்களில் பல ஈடுபடுவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இதே நிலைமை தற்போது ஒரு பிரபல நடிகைக்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது, பாகுபலி-2 திரைப்படத்தில் நடிகை அனுஷ்காவுக்கு அண்ணியாக நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி. இவர் ஃபேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருவார்.
அவ்வாறு பதிவேற்றம் செய்து ஒரு புகைப்படத்தை மர்ம நபர் யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளார். அவர் அஸ்ரிதாவின் புகைப்படத்தை பிரபல டேட்டிங் தளத்தின் விளம்பரத்தில் இணைத்துள்ளார். பல நாட்கள் கழித்து அஸ்ரிதாவுக்கு இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. புகைப்படத்தை பார்த்து பேரதிர்ச்சியான அவர் தான் இந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை என்றும், என் புகைப்படத்தை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் கூறினார்.
இதுகுறித்து விரைவில் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகளிடம் புகாரளிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.