பிரபல நடிகை நிகிதா மர்ம மரணம்! தவிக்கும் 4 மாத கைக்குழந்தை!

பிரபல நடிகை நிகிதா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


ஒடிசாவை சேர்ந்த பிரபல நடிகை சிம்ரன் நேற்று முன் தினம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடல் மகாநதி கரையில் காயங்களுடன் மீட்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில் மேலும் ஒரு நடிகை திடிரென உயிரிழந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. 32 வயதே ஆன நிகிதா தான் திடீரென உயிரிழந்தவர்.

   நிகிதாவை கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அவசர அவசரமாக அழைத்து வந்தனர். தலையில் பலத்த காயம் இருந்த நிலையில் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நிகிதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிவிட்டதால் நிகிதாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

   இதனை அடுத்து நிகிதா உடலை அவரது பெற்றோர் எடுத்துச் சென்றனர். நிகிதாவுக்கு எப்படி தலையில் காயம் ஏற்பட்டது என்பது மர்மமாக உள்ளது. அவரதுகுடும்பத்தினர் இது குறித்து பேச மறுக்கின்றனர். அதே சமயம் வீட்டின் மாடியில் ஏறும் போது தவறி விழுந்து நிகிதா தலையில் அடிபட்டுவிட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் மாடிப்படியில் தவறி விழுந்து எப்படி ஒருவருக்கு உயிர் போகும் என்கிற கேள்வி எழுந்துள்ளருது.

   மேலும் நடிகை நிகிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சிலர் குரல் எழுப்பி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிகிதாவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்துள்ளது. தற்போது 4 மாத குழந்தையை தவிக்க விட்டுவிட்டு நிகிதா உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   ஏ.சி.பி நிகிதா எனும் சீரியல் மூலமாக ஒடிசா மாநிலம் முழுவதும் நிகிதா பிரபலம். இதே போல் நிகிதா நடிப்பில் ஒளிபரப்பான டபஸ்யா சீரியலும் அம்மாநிலத்தில் பட்டி தொட்டி எங்கும் ஹிட். திடீரென பிரபலமான நடிகை ஒருவர் உயிரிழந்திருப்பது ஒடிசா டிவி ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.