திடீர் மூச்சுத் திணறல்..! நொடியில் பறிபோன உயிர்! சீனியர் நடிகை வீட்டில் இரவு நேர்ந்த துயரம்!

பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த எங்க ஊரு ராஜா திரைப்படத்தின் மூலம் நடிகை நாஞ்சில் நளினி திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தங்கப்பதக்கம், தீர்ப்பு, அண்ணன் ஒரு கோயில் என்ற பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 70 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ள இவர் பல்வேறு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரையுலகில் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் தனது திறமையான நடிப்பின் மூலம் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாஞ்சில் நளினி தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். 74 வயதாகும் நாஞ்சில் நளினி சமீபகாலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இவருக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினியின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.