வயிறு முட்ட முட்ட பீர் குடித்தேன்! பிறகு நடந்த விபரீதம்! பிரபல நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

பீர் அதிகமாக குடித்ததால் தன்னை படத்திலிருந்து இயக்குனர் அதிரடியாக நீக்கி விட்டார் என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளது திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் மிகவும் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியவர் ராதிகா ஆப்தே. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 

இங்கிலாந்து நாட்டின் பிரபல இசையமைப்பாளரான பெனடிக் டெய்லர் என்பவரை மணமுடித்தார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தான் அதிகமாக பீர் குடித்தால் ஒரு பட வாய்ப்பை இழந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

அதாவது, பிரபல பாலிவுட் இயக்குனர் ஆயுஷ்மான் விக்கி டோனர் எனும் படத்தில் நடிப்பதற்கு கதாநாயகியாக முதன்முதலில் தன்னை தேர்ந்தெடுத்தார் என்று கூறினார். படத்தில் நடிக்க தொடங்குவதற்கு முன் ஒரு மாத கால விடுமுறை இருந்தது. அப்போது நான் வெளிநாட்டிற்கு சென்று விடுமுறையை கழித்தேன்.

உணவு முறையில் கட்டுப்பாடின்றி சாப்பிட்டேன். அதிகமாக பீர் குடித்தேன். உடல் எடை அதிகரித்து சற்று குண்டாக தோன்றினேன். விடுமுறைக்கு பிறகு இயக்குனர் ஆயுஷ்மானை சந்தித்தபோது அவர் அதிர்ந்து போனார். இறுதியில் என்னை படத்தில் இருந்து முழுவதுமாக நீக்கிவிட்டார். எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை என்று வருத்தமாகக் கூறினார்.

இந்த சம்பவமானது கோலிவுட் திரையுலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.