காரில் சென்று கொண்டிருந்த நடிகையிடம் தனியார் நிறுவன கார் ஓட்டுநர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் பிரபல நடிகையின் கையை பிடித்து இழுத்து டிரைவர் செய்த தகாத செயல்! அதிர வைக்கும் காரணம்!
ஸ்வஸ்திகா தத்தா பிரபல வங்கமொழி சீரியல் நடிகைகளுள் ஒருவராவார். இவர் தன் வீட்டில் இருந்தால் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு உபர் கார் பதிவு செய்திருந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு காரில் இருந்து அவரை நடுரோட்டில் இறங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஸ்வஸ்திகா இறங்க மறுத்ததால் அவரை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே தள்ளி உள்ளார்.
இந்த தகவல்களை அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார். அவர் பதிவு செய்திருந்தது: காலை 8 மணி அளவில் படப்பிடிப்பிற்கு செல்வதற்காக ஊபர் கார் பதிவு செய்து இருந்தேன். ஜம்ஷத் என்றார் ஓட்டுநரின் காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று என்னுடைய பயணத்தை ரத்து செய்தார்.
காரை விட்டு இறங்குமாறு என்னை வற்புறுத்தினார். நான் மறுத்ததால் வண்டியை வேறொரு பக்கத்தில் திருப்பினார். காரில் இருந்து கையை பிடித்து என்னை வெளியேறினார். பின்னர் நண்பர்களுடன் இணைந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டனர். நான் அவரைப்பற்றிய தகவல்களை பதிவு செய்துள்ளேன். என் தந்தையிடம் நிகழ்ந்த விபரீதத்தைக் கூறி அந்த ஓட்டுநர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க கூறினேன்.
என்று பதிவு செய்திருந்தார். தேவதாஸ் உணவகத்தின் அருகில் காலை 8 -9 மணிக்குள் இந்த சம்பவங்கள் அரங்கேறின. ஸ்வஸ்திகா அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் ஓட்டுநர் ஜம்ஷத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது கொல்கத்தா மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.