திருமணம் செய்து கொள்ளாமலேயே 5மாத கர்ப்பம்..! பிக்பாஸ் நடிகரால் நடிகைக்கு ஏற்பட்ட நிலை..! வெளியானது புகைப்படம்!

பிரபல நடிகை ஒருவர் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் அவருடைய கணவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் நடிகர், நடிகைகளுக்கு ஃபாலோயர்கள் அதிகளவில் இருப்பர் என்று கூறினால் அது மிகையாகாது. தற்போது ஊரடங்கு உத்தரவினால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி அவர்கள் ரசிக்கும் நடிகர் நடிகைகள் கூட தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழித்து வருகின்றனர்.

கோலிவுட் திரையுலகில் வஞ்சகர் உலகம், 7 ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அனிஷா ஏம்ப்ரோஸ். இவர் கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி, கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.‌

தெலுங்கு திரையுலகில் கோபாலா கோபாலா, இ நகரனிகி ஏமாயிந்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருடைய காதலரின் பெயர் தேஜஸ்வி. இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனிஷா அம்ரோஸ் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த செய்தியை தேஜஸ்வி அனிஷாவின் வயிற்றில் முத்தம் கொடுப்பது போன்று ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து செய்தியை பகிர்ந்தார்.

அனிஷா திருமணமாகாமலேயே கருவுற்றிருக்கும் செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.