டிவியில் இருந்து சினிமாவுக்கு வர அட்ஜெஸ்ட்மென்ட்..! தொகுப்பாளர் கேட்ட கேள்வி! பேட்டியை பாதியில் முடித்த வாணி போஜன்! ஏன் தெரியுமா?

சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் நடிகை வாணி போஜன் ஒரு பேட்டியிலிருந்து நடுவிலேயே வெளியேறிய செய்தியானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


பிப்ரவரி 14-ஆம் தேதியன்று "ஓ மை கடவுளே" என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சின்னத்திரையில் இருந்து இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. நடிகை வாணி போஜனின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரியளவிற்கு கவர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து  இவர் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்தார். ஆனால் பேட்டி முடிவதற்கு முன்பே வாணி போஜன் எழுந்து சென்றுவிட்டார்.

அந்த பேட்டியின்போது தொகுப்பாளர் அவரிடம், "உங்களுடைய சினிமா வாழ்க்கையில் ஏதேனும் அட்ஜஸ்ட்மென்ட் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு வாணி போஜன் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதிலும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பரவி வருகிறது. தயவுசெய்து இந்த முறையை அனைவரும் கைவிட வேண்டும். எனக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால் அவை  நேரடியாக ஏற்பட்டவை அல்ல. 

என்னுடைய மேனேஜரிடம் இதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அவரே சரி செய்துவிட்டார். இதுபோன்று நடிகைகளுக்கு இனிமேல் எந்த விதமான சிரமங்களும் ஏற்பட்டுவிடாது என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

மீண்டும் அந்த தொகுப்பாளர், "சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நுழைவதற்கு ஏதாவது அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டீர்களா" என்று கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த வாணிபோஜன், "எந்த காலத்திலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ளவில்லை. இனிமேல் உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க இயலாது. இன்டர்வியூ இதோடு முடித்து கொள்ளுங்கள்" என்று கறாராக கூறி பேட்டி முடிவதற்கு முன்பே எழுந்து சென்றுவிட்டார்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.