முதல் முறையாக வெளியானது இதுவரை யாரும் பாத்திராத பாத்திமா பாபுவின் வீடியோ..! வயது தான் 56..! ஆனால் செய்வதெல்லாம்..? வீடியோ உள்ளே..!

பிரபல செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு யோகா செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பிரபல செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு 25 வருடங்களுக்கு மேல் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் இவர் பணிபுரிந்து வந்தார். பின்னர் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். விஐபி ,நேருக்கு நேர் ,முகவரி, பார்த்தேன் ரசித்தேன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் பங்கேற்று சிறிது நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருந்து வரும் நடிகை மற்றும் செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நடிகை பாத்திமா பாபு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கால்களை வளைத்து யோகா செய்துள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.