படுக்கை அறை காட்சிகளால் களைத்து போய்விட்டேன்..! உண்மையை ஒப்புக் கொண்ட சீனியர் நடிகை!

பிரபல நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்திருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வருடங்களாக கோலிவுட் திரையுலகில் பாடகியாகவும், கதாநாயகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தன்னுடைய நடிப்பு திறமையினால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. 

அதன் பின்னர் இயக்குநர் சுந்தர்.சி, இயக்கிய அரண்மனை படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு கோலிவுட் திரை உலகையே புரட்டிப்போட்ட வடசென்னை புகைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இருப்பினும் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, வடசென்னை திரைப்படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக கூறியுள்ளார். இது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறுகையில், "வடசென்னை திரைப்படத்தில் நான் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தேன். அந்த திரைப்படம் வெற்றி அடைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் தற்போது எனக்கு அதே மாதிரியான படுக்கையறை கதாபாத்திரங்களே கிடைக்கின்றன. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது தவறில்லை. ஆனால் ஒருமுறை நடித்த பின்னும் இதுபோன்ற காட்சிகளில் மட்டுமே நடிக்க முடியும் என்ற தோற்றம் ஏற்படுவது வருத்தம் அளிக்கிறது. வடசென்னை படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். இனி நல்ல கதை மற்றும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால், எந்தவித படுக்கை காட்சிகளும் இல்லையென்றால் என்னுடைய சம்பளத்தை சற்று குறைத்து கொள்ளவும் தயாராக உள்ளேன்" என்று பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.