ஊரடங்கியலும் நள்ளிரவு பார்ட்டி..! போதை நடிகையுடன் அதிவேகத்தில் கார்..! பிறகு ஏற்பட்ட கோர விபத்து..!

ஊரடங்கை மதிக்காமல் பிரபல கன்னட நடிகை நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்ற சம்பவமானது மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 65,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 12,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 3372 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 267 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 77 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியா முழுவதிலும் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நேரத்தில் பிரபல நடிகை செய்துள்ள செயலானது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவர் ஷர்மிலா மந்த்ரே. நாடு முழுவதிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நேரத்தில் நேற்று இரவு தன்னுடைய காரில் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று மது அருந்தியுள்ளார். அதன் பின்னர் காரை வேகமாக ஓட்டி வந்து வசந்த் நகர் என்ற பகுதியில் கீழே உள்ள பாலத்தின் தூண் மீது மோதியுள்ளார்.

காரில் பயணம் செய்த 4 பேருக்கும் கடுமையான அடி ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் தான் வாகனத்தை ஓட்டி வந்ததாக கூறி ஓட்டுனர் ஒருவர் சரணடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவமானது அம்மாநில மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.