ஆமாம்டா.. சரத்குமார் தான் என்னோட அப்பா..! வைரலாகும் இளம் பெண்ணின் அதிரடி ட்வீட்..!

நடிகர் சரத்குமாரின் மகளை சமூக வலைத்தளங்களில் நபரொருவர் மோசமாக பேசியுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியான ராதிகா சரத்குமார் நடித்து வெளிவந்துள்ள "வானம் கொட்டட்டும்" திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படமானது குடும்ப பாங்காக அமைந்துள்ளதால் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை ராதிகா சரத்குமாரின் முன்னாள் கணவரின் மகள் ரேயான். இவரும் தற்போது ராதிகா மற்றும் சரத்குமார் உடனே வசித்து வருகின்றார். இவருக்கு வானம் கொட்டட்டும் திரைப்படம் பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில், "உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது அப்பா" என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு ஒரு நெட்டிசன் மிகவும் மோசமான வகையில் பதிலளித்திருந்தார். அதாவது, "அம்மா ஓகே. ஆனால் இவர அப்பானு கூப்பிடறதுக்கு உனக்கு வெட்கமா இல்லையா" என்று தரம் தாழ்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். 

உடனே ரேயான், "அவர் எனக்கு அப்பா தான். நீ இப்ப என்ன பண்ண போற" என்று பதிலடி கொடுத்திருந்தார். ரேயானின் இந்த பதிலடிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.