கையில் 2 மாத குழந்தை! தனிமை! மூச்சு முட்ட முள்ளயங்கிரி மலையில் ஏறிய சூர்யா நாயகி! ஏன் தெரியுமா?

பிறந்து 2 மாதமேயான குழந்தையை தூக்கிக்கொண்டு பிரபல நடிகை மலை ஏற முயற்சித்த சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வலம் வரும் முன்னணி கதாநாயகிகளில் நடிகை சமீரா ரெட்டியும் ஒருவர். சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தவர். இவருக்கு 2 மாதங்களுக்கு முன்னர் அழகான குழந்தை பிறந்தது. இது இவருடைய 2-வது குழந்தையாகும். 

கர்நாடக மாநிலத்தில் முள்ளயங்கிரி என்ற புகழ்பெற்ற மலை உள்ளது. இந்த மலையானது 6,300 அடி உயரமானதாகும். சில நாட்களுக்கு முன்னர் சமீரா ரெட்டி தன்னுடைய குழந்தையுடன் இந்த மலையை ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் அந்த மலையை ஏற  இயலவில்லை. அவருக்கு ஏறும்போது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதால் தன்னுடைய முயற்சியை பாதியிலேயே கைவிட்டுள்ளார்‌. மேலும் தன்னுடைய முயற்சியின் போது எடுத்த அழகிய புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதற்கு அவருடைய ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். மேலும்புதிதாக குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் சிலர் தாங்களும் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதாக பகிர்ந்து கொண்டார்.

இந்த சம்பவமானது சமீரா ரெட்டியின் நெருங்கிய நண்பர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.