2வது கணவரின் மகளை வேலைக்காரியுடன் அனுப்பிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி! வனிதா கைது செய்யப்படுவதன் பரபரப்பு பின்னணி!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருக்கும் நடிகை வனிதா மீது குழந்தை கடத்தல் பிரிவில் தெலங்கானா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். எந்நேரத்திலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வனிதாவை கைது செய்யும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தென்னிந்திய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார். இவர் நடித்த நாட்டாமை திரைப்படம் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இவருக்கு முன்னாள் கதாநாயகியான மஞ்சுளாவுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு வனிதா விஜயகுமார் என்ற மகள் உள்ளார்.

இதுவரை இவருக்கு 3 திருமணங்கள் நடந்துள்ளன. இவருடைய முதல் கணவர் கோலிவுட் நடிகர் ஆகாஷ். இத்தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். இரண்டாவதாக தெலங்கானா மாநிலத்தில் வசித்து வரும் ஆனந்த்ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 10 வயதில் மகள் உள்ளார். வனிதா இவரையும் பிரிந்து சென்றார்.  விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற போது, மகள் ஆனந்த்ராஜிடமே வளர வேண்டும் என்ற உத்தரவு வெளியானது. 

இந்நிலையில் நடன இயக்குனரான ராபர்ட் என்பவருடன் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரையும் தற்போது பிரிந்தே வனிதா வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் வனிதா ஹைதராபாத் சென்ற போது தன் 10 வயது மகளை கண்டுள்ளார். ஆனந்த்ராஜிடம் கூறாமல் தன் மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். இதனால் பதறிய ஆனந்த்ராஜ் தெலங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கடந்த முறை சென்னைக்கு வந்தபோது வனிதா கிடைக்காமல் தெலங்கானா காவல்துறையினர் ஏமாற்றத்துடன் சென்றனர். இந்நிலையில் வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்து கொண்டிருப்பதை கண்ட ஆனந்த்ராஜ் மீண்டும் தெலங்கானா காவல் நிலையத்தில்  வனிதாவை கைது செய்யுமாறு கூறி உள்ளார்.

தெலங்கானா காவல்துறையினர் சென்னை பூந்தமல்லியில் உள்ள பிக்பாஸ் ஃபில்ம் சிட்டிக்குள் நுழைந்து நிகழ்ச்சியின் தயாரிப்பாளரிடம் வனிதாவை ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். விசாரணையில் மகளை வேலைக்காரியுடன் அனுப்பிவிட்டு வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவமானது பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.