பாபிலோனா தம்பிடா நான்..! போலீஸ்காரர் கன்னத்தில் ஓங்கி அறைந்த விக்னேஷ்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

தமிழ் சினிமாவின் பிரபல கவர்ச்சி நடிகையான பாபிலோனாவின் சகோதரர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்சினிமாவில் அசத்தல், தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, வட்டாரம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பாபிலோனா. இவர் பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். இவரது சகோதரர் விக்னேஷ் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் குடிபோதையுடன் சுற்றி வந்து இருந்த பாபிலோனாவின் சகோதரர் விக்னேஷ் தகராறு செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை விசாரித்து காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்தனர். ஆனால் போதையில் இருந்த பாபிலோனாவின் தம்பி விக்னேஷ் ரோந்து வாகன ஓட்டுனர் சங்கரை கன்னத்தில் அறைந்துள்ளார். 

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாபிலோனாவின் தம்பி விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.