பெண் குழந்தைக்கு தாய் ஆகிவிட்டேன்! இளம் நடிகை வெளியிட்ட தகவல்!

அதே கண்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷிவாதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது .


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அதே கண்கள் திரைப்படத்தில் கலையரசன், ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் வில்லியாக தனது சிறப்பான நடிப்பின் மூலம் நடிகை ஷிவாதா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் . இந்த படத்தில் நடிகை ஷிவாதா அவர்களின் சிறப்பான நடிப்பை பாராட்டி அவருக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன .

 இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக ஒரு முக்கியமான போஸ்டை இவர் பகிர்ந்துள்ளார் . அந்த போஸ்டில் அவர் எனக்கு கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி பெண் குழந்தை பிறந்தது .

அந்தக் குழந்தைக்கு அருந்ததி என நாங்கள் பெயர் வைத்திருக்கிறோம் என்ற தகவலையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அந்த பக்கத்தில் அவர் தனது குழந்தையின் அழகான சிறிய விரல்களை புகைப்படம் எடுத்து அதில் பதிவிட்டிருக்கிறார் 

மேலும் அவர் தனது ரசிகர்களுக்கு ஓணம் பண்டிகைக்கான வாழ்த்துக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .