திருமணமாகி 14 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை! புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ந்த பிரபல நடிகர்-நடிகை!

பிரபல மலையாள நடிகரின் குழந்தை தன்னுடைய தந்தையின் சினிமாவை தியேட்டரில் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மலையாள திரையுலகில் இயங்கிவரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் குஞ்சக்கோ போபன். இவர் நடித்த பல்வேறு மலையாள திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளன. இவர் நடித்து சமீபத்தில் வெளியான "அஞ்சாம் பத்தீரா" என்ற திரைப்படம் 10-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படமானது அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய மனைவியின் பெயர் பிரியா. இருவருக்கும் 2005-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டில் இருவரும் "இசா" என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். 

இந்நிலையில் தற்போது வெளியான படத்தை பிரபல மாலில் அமர்ந்துகொண்டு "இசா" பார்ப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.