தனுஷ் குடும்பத்தில் சுப நிகழ்வு! வைரலாகும் புகைப்படம்! என்ன தெரியுமா?

தன்னுடைய சகோதரியின் மகனுக்கு மொட்டையடித்து காது குத்தும் விழாவுக்கு நடிகர் தனுஷ் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.


இந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். முதன்முதலில் "துள்ளுவதோ இளமை" என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பின்னர் காதல் கொண்டேன், பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி ஆகிய பிரமாண்டமான வெற்றி படங்களின் மூலம் கோலிவுட் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார்.

அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாலிவுட் திரை உலகில் "ஷமிதாப்" என்ற படத்தின் மூலம் நடிப்பின் இமயமான நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தார்.


இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார். இவர்களுக்கு கார்த்திக்கா என்ற சகோதரி உள்ளார். அவருக்கு திருமணமாகி சத்திரியன் என்ற குழந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தது. அந்த குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவது எதற்காக நேற்று குடும்பத்துடன் தனுஷ் திருப்பதிக்கு சென்று வந்தார். 

இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தின் கீழே, " மாமாக்களின் அன்பு என்பது எப்போதும் என்னுடைய குழந்தைகளுக்கு நிறைய கிடைக்கும். கிட்டத்தட்ட 2,3 வருடங்களாக இந்த நிகழ்வுக்காக காத்திருந்தேன்.

திருமலையில் திவ்ய தரிசனத்தை மேற்கொண்டோம். எப்பொழுதும் என்னுடைய சகோதரர்கள் அவர்களுடைய கடமையை செய்வதிலிருந்து தவறியதில்லை. சத்ரியன் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஓம் நமோ நாராயணா" என்று கார்த்திக்கா பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.