12 ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக உயிரிழந்த நடிகர் பாண்டியன்..! தற்போது வெளியான பதற வைக்கும் காரணம்! என்ன தெரியுமா?

பிரபல நடிகர் குடிப்பழக்கத்தினால் உயிரிழந்த வாழ்க்கை வரலாறு நம்மில் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


1980-களில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாண்டியன். இயக்குநர் சிகரம் பாரதிராஜா மண்வாசனை திரைப்படத்தின் மூலம் பாண்டியனை அறிமுகம் செய்தார். அடுத்தடுத்த படங்களில் அருமையாக நடித்து மாபெரும் வெற்றிப்படங்களாக மாற்றி நடிப்பின் சிகரத்திற்கு உயர்ந்தார். அடுத்த ரஜினிகாந்த் என்று பாரதிராஜாவால் போற்றப்பட்டார். குறிப்பாக பிறகு நடித்த ஆண்பாவம் எனும் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது.

இதனிடையே இவர் அரசியல் ரீதியில் திராவிட முன்னேற்ற கழகத்தில் பல ஆண்டுகள் இடம் பெற்றிருந்தார். அதன் பின்னர் அதிமுகவில் இணைந்தார். திரையுலகிலும், அரசியலிலும் ஏற்பட்ட கூடாநட்பின் காரணமாக இவருடைய வாழ்க்கை திசை மாறிப்போனது. குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சினிமா படங்களை சரியாக தேர்வு செய்யாமல் நட்பிற்காக நடித்த பல படங்களை இழந்தார். சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தும் வீணாகி கடைசியில் குடிப்பதற்கு கூட பணம் இல்லாமல் திக்கு முக்காடினார். 

இதனிடையே அதே குடிப்பழக்கத்தினால் கல்லீரல் கெட்டுப்போய் 2008-ஆம் ஆண்டில் மதுரை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். வாழ்க்கை கெடுக்கும் என்பதற்கு உதாரணமாக இவருடைய வாழ்க்கை அமைந்திருந்ததாக பலர் திரையுலகினர் கண்ணீர் சிந்தினர்.