சொந்த வீட்டை பரிதாபமாக இழந்த கமலின் 2வது மனைவி..! தவித்தவருக்கு உதவி செய்ய முன்வந்த பிரபல நடிகர்..! என்ன ஆச்சு தெரியுமா?

தனது சொந்த வீட்டை இழந்து நிற்கும் கமலின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் உதவ முன்வந்துள்ளார்.


பிரபல திரைப்பட நடிகர் கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகா ஆவார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பிரபல நடிகையான சரிகா ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஆகியோரின் அம்மா ஆவார். இவர் திரைப்படங்களில் நடித்து சம்பாதித்து மும்பையில் ஜுஹு என்ற பகுதியில் சொந்த வீட்டை வாங்கி அதில் வசித்து வந்தார். 

சரிகா அந்த வீட்டை அவரது அம்மாவின் பெயரில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் சரிகாவின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இறப்பதற்கு முன்னாள் சரிகாவின் அம்மா தனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடு மற்றும் மற்ற சொத்துக்களையும் தன்னுடைய குடும்ப நண்பரான டாக்டர் விக்ரம் தாகூர் என்பவரின் பெயரில் உயில் எழுதிவைத்துள்ளார். 

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த சரிகா தற்போது தனது வீடு சம்பந்தமான நீதிமன்ற போராட்டத்தில் உள்ளார். இதன் காரணமாக சரிகா தற்போது தனது வீட்டில் வசிக்க முடியாத சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் சகோதரி நுஸ்ஷத் நடிகை சரிகாவின் நெருங்கிய தோழி ஆவார். இதனால் நடிகை சரிகாவின் தற்போதைய நிலைமை அறிந்து அவர் தனது சகோதரர் அமீர்கானிடம் சரிகா விற்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி கூறியுள்ளார். இதனை அறிந்த பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிகை சரிகாவுக்கு உதவ முன் வந்துள்ளார்.