திருமணமாகி 9 ஆண்டுகள்..! கல்யாண நாளில் மனைவியை பிரிந்து இருக்கும் பிரபல நடிகர்.! ஏன் தெரியுமா?

திருமணமான 9 ஆண்டுகளில் முதன்முறையாக திருமண நாளில் தன்னுடைய மனைவியின் பிரிந்து இருப்பதாக நடிகர் பிருத்விராஜ் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைத்தளங்களும் வைரலாகி வருகிறது.


மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் திரைப்படங்களில் பிரம்மாண்டமாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துவர் நடிகர் பிருத்விராஜ். குறிப்பாக கோலிவுட் திரையுலகில் இவர் நடித்திருந்த நினைத்தாலே இனிக்கும், கண்ணாமூச்சி ஏனடா, அபியும் நானும் ஆகிய திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்தன. மலையாளத்தில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தன.

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் 2012-ஆம் ஆண்டில் சுப்ரியா என்ற பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இருவரும் தங்களுடைய கல்யாண நாளை ஒன்றாக கொண்டாடுவர். ஆனால் நடிகர் பிருத்விராஜ்  "ஆடுஜீவிதம்" திரைப்படத்தின் ஷூட்டிங்காக ஜார்டன் நாட்டிற்கு குழுவினருடன் சென்றபோது இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் திரைப்படக்குழுவினர் அங்கேயே சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களால் இந்தியா திரும்ப இயலவில்லை. இந்நிலையில் பிரித்விராஜ் தன்னுடைய திருமண நாளில், இரவு 12 மணியளவில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். 

"9 வருடங்கள்; இடைக்கால விலகல்; எப்போதும் உன்னுடன்" என்று பதிவு செய்திருந்தார்.

அவருடைய மனைவி சுப்ரியாவும் தங்களுடைய திருமணநாள் புகைப்படத்தை பகிர்ந்தார். அதற்கு கீழே "இனிய 9-வது திருமணநாள் வாழ்த்துக்கள். முதன்முறையாக பிரிந்து கொண்டாடுகிறோம். வேறு என்ன செய்வது. விரைவில் வந்து இந்த பிரிவினை ஈடுசெய்யும் வகையில் மகிழ்ச்சியை தருவாயாக" என்று பதிவிட்டுள்ளார்.

இருவரின் காதல் மற்றும் அன்னியோன்னியத்தை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.