வெளியானது தர்பார் திரைப்படத்தின் முதல் விமர்சனர்..! படம் எப்படி இருக்கு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் வருகிற 9ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது.


இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பி வருகின்றது. 

இந்நிலையில் வருகிற 9 ஆம் தேதி தர்பார் திரைப்படம் உலகமெங்கும் சுமார் நான்காயிரம் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதனால் சினிமா உலகில் தர்பார் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தர்பார் திரைப்படத்தை பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நண்பர் ஒருவர் பார்த்துள்ளாராம். 

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் தர்பார் திரைப்படத்தில் சண்டை காட்சிகள் செம்ம தூளாக வந்துள்ளதாகவும், மேலும் தர்பார் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.