சாதாரண குடும்பத்தில் பிறந்து புகழின் உச்சத்திற்கு சென்ற விசு..! எப்படி தெரியுமா? நினைவுகூறும் திரையுலகம்!

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான நடிகர் விசு சிறுநீரக கோளாறால் உயிரிழந்திருப்பது கோலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ் திரையுலகில் கருத்துக்களை மக்களின் மனதில் ஆழமாக பதிய வைத்த இயக்குநர்களில் ஒருவர் நடிகர் விசு. இவர் 1945-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் மீனாட்சிசுந்தரம் ராமசுவாமி விஸ்வநாதன். இவருடைய மனைவியின் பெயர் உமா. இத்தம்பதியினருக்கு லாவண்யா,  கல்பனா, சங்கீதா என 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இவர் இளமையிலேயே மிக சிறந்த அறிவாளியாக திகழ்ந்தார். மேலும் நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நாடகங்களில் நடித்து என்ற போது தன்னுடைய பெயரில் விசு என்று சுருக்கி கொண்டார். பிள்ளையார் அதே பெயரிலேயே சமூகத்தில் அறியப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இவர், நாடக கதைகளையே வெள்ளித்திரையில் தனக்கென ஒரு தனி பாங்கில் இயக்கி வந்தார். பல்வேறு நட்சத்திரங்கள் தன்னுடைய திரைப்படத்தில் இருந்தாலும், அனைவருக்கும் முக்கியத்துவத்தை அளித்து, தானும் அந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதுவே அவருடைய மைய ஆற்றல் என்று அவரின் நண்பர்களால் புகழப்பட்டு வந்தது.

குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை நுணுக்கமாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தன்னுடைய திரைப்படங்களில் அதிகளவில் கூறியிருப்பார். இந்நிலையில், 1986-ஆம் ஆண்டில் வெளிவந்த "சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இந்த திரைப்படத்தில் விவாகரத்து செய்யாமல் இருப்பதற்கான அனைத்து நுணுக்கங்களையும் விசு தெரிவித்திருப்பார்.

திரையுலகிலிருந்து சிறிது காலம் தங்கியிருந்தபோது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் "அரட்டை அரங்கம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் வாழ்வில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பலரையும் தன்னால் இயன்ற அளவிற்கு மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபகாலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த விசு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலினால் விமான சேவைகள் மிகவும் குறைந்திருக்கும் நிலையில், அவருடைய மகள்கள் அனைவரும் அமெரிக்காவிலிருந்து தாயகம் வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் எவ்வாறு கலந்து கொள்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் விசுவின் இழப்பு ஒட்டுமொத்த சினிமாவின் இறப்பு என்று பல்வேறு நடிகை நடிகர்கள் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.