பெங்களூரை அதிர வைத்தவர்..! தாவூத்தை மிரள வைத்தவர்! தென்னாட்டின் ஒரே தாதா முத்தப்பா ராய்..! RIP..!

பெங்களூருவை ஆட்டிப்படைத்து வந்த நிழல் உலக தாதா முத்தபா ராய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


1990,2000-களில் இந்திய நாட்டின் முன்னணி நகரங்களை நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் ஆகியோர் தங்கள் வசம் வைத்திருந்தனர். இவர்களுக்கு கொஞ்சம் கூட சளைக்காத வகையில் முத்தப்பா ராய் என்ற நிழலுலக தாதா பெங்களூருவை தன் கைவசம் வைத்திருந்தார். தன்னுடையதாக வாழ்க்கையின் தொடக்கத்தில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து முதலியவற்றை கொடிகட்டி பறந்தவர் முத்தப்பா ராய். இவர் தாவூத் இப்ராஹிமுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

1990-களில் நிழலுலகத்தில் கொடி கட்டி பறந்த முத்தப்பா ராய்க்கும் எதிரிகள் வளர தொடங்கினர். அவர்கள் அனைவரும் முத்தப்பா ராயை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினர். திடீரென்று நிகழ்ந்த துப்பாக்கி சூட்டிலிருந்து அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இது அவருடைய வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்திற்கு வழி வகுத்தது. உடனடியாக அவர் துபாய்க்கு இடம்பெயர்ந்தார்.

நல்லவராக மாறிவிட்டதாக நாடகமாடி விட்டு மற்றொரு ரூபத்தில் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கினார். அதாவது, அந்த காலத்தில் மருந்து தயாரிப்பு துறையின் நிழலுலக கேங்குகளின் தலைவராக முத்தப்பா ராய் விளங்கி வந்தார். அடுத்த சில ஆண்டுகளிலேயே துபாயில் அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டார்.

தன் மீதான வழக்குகளில் ஆஜராகி அவற்றை ஒன்றுமில்லாமல் செய்த முத்தப்பா ராய் இறுதியில் அரசியலில் குதித்தார். ஊழலை ஒழிப்பதற்காக ஆயுதத்தை ஏந்துங்கள் என்று அவரிட்ட முழக்கங்களை கன்னடர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த வருட தொடக்கத்திலிருந்து புற்றுநோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி புற்றுநோயால் முத்தப்பா ராய் உயிரிழந்தார். இந்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.