ரஞ்சிதா வலையில் நித்தி சிக்கியது எப்படி? படுக்கையறை வரை சென்றது எதனால்? சினிமா பிரபலம் கூறும் ரகசியம்!

நித்யானந்தாவின் வலையில் ரஞ்சிதா எவ்வாறு சிக்கிக்கொண்டார் என்பது குறித்து தெலுங்கு திரைப்பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா உலக அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறார். இவர் ஒரு தனி நாட்டை உருவாக்கியுள்ளது ஆகவும், அதற்கு கைலாசம் என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறி வைரலானார்.

அவர் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். குஜராத் மாநிலத்தில் அவர்மீது கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. அவரை கண்டுபிடிக்க இயலாமல் காவல்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே "இன்டர்போல்" காவல்துறையினர், நித்யானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக "ப்ளூ கார்னர் நோட்டீஸ்" கொடுத்து அறிவித்துள்ளது.

தெலுங்கு திரைப்பிரபலமான பரிச்சூரி கோபாலகிருஷ்ணன் நித்யானந்தாவின் வலையில் ரஞ்சிதா எவ்வாறு சிக்கி கொண்டார் என்பது குறித்த காரணங்களை வெளியிட்டுள்ளார்.

"என்னுடைய மகளும் நடிகை ரஞ்சிதாவும் மிகவும் நெருக்கமான தோழிகள். நான் முதன் முதலில் சந்தித்தபோது ரஞ்சிதாவிடம் ஏகப்பட்ட திறமைகள் குவிந்திருந்தன. சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் ஒரு தளம் முழுவதிலும் புத்தகங்களை வைத்திருந்தார். 

அவருடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்து நான் அவரை "கடப்பா ரெட்டம்மா" என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்தேன். ஒருமுறை என்னை சந்தித்த போது நித்யானந்தா அட்டைப்படம் பொருந்திய ஒரு புத்தகத்தை எனக்கு அளித்தார். நானும் எதுவும் கூறாமல் வாங்கிக்கொண்டேன்.

அன்று நான் ஏதாவது கண்டித்து இருந்தால் இன்று அவர் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டார். மேலும் அவருக்கென திரையுலகில் இன்னமும் ஒரு தனி இடம் உள்ளது. ரஞ்சிதா அதிக அளவில் புத்தகம் படிப்பதில் ஈடுபாடு உடையவர் என்பதால், நித்தியானந்தாவின் புத்தகங்களின் மூலம் அவர் ஈர்க்கப்பட்டார்" என்று கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.